முகப்பு
புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 500 ஆன்மிக நூல்களை தலைமைச் செயலகத்தில் வெளியிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை
சென்னை

மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 500 ஆன்மிக நூல்கள் : முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்

இந்து சமய அறநிலையத் துறை பதிப்பகப் பிரிவின் மூலம் புதுப் பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 500 ஆன்மிக நூல்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.

Updated On : 5 மார்ச், 2026 at 9:44 PM
புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 500 ஆன்மிக நூல்களை தலைமைச் செயலகத்தில் வெளியிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை
பகிர்:

இந்து சமய அறநிலையத் துறை பதிப்பகப் பிரிவின் மூலம் புதுப் பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 500 ஆன்மிக நூல்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.

சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் பதிப்பகப் பிரிவு தொடங்கப்பட்டு, முதல் கட்டமாக கடந்த 2023 ஜன.19-ஆம் தேதி தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை, அபிராமி அந்தாதி உள்ளிட்ட அரிய 180 ஆன்மிக நூல்களும், இரண்டாம் கட்டமாக கடந்த 2025 பிப்.27-இல் தல வரலாறு, தல புராணங்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட பக்தி இலக்கியங்கள் உள்ளிட்ட அரிய 108 ஆன்மிக நூல்களும், 3-ஆம் கட்டமாக கடந்த ஆண்டு ஏப்.15-இல் புராணக் கதை நூல்கள், இதிகாச நூல்கள் உள்ளிட்ட 300 ஆன்மிக நூல்களும் என மொத்தம் அரிய 516 ஆன்மிக நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டன.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் நடத்தப்படும் பதிப்பகப் பிரிவின் மூலம் இதுவரை 516 அரிய ஆன்மிக நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டும் ஆன்மிக நூல்கள், சமய நூல்கள், கையடக்கச் சிற்றேடுகள், இறைத் துதிப் பாடல்கள், பாராயண புத்தகங்கள், வழிகாட்டிக் கையேடுகள் உள்பட 500 நூல்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் பதிப்பகப் பிரிவின் மூலம் 4-ஆம் கட்டமாக, தொன்மையான அரிய புராணங்கள், திருமுறைகள், பிரபந்தங்கள், போற்றிப் பாடல்கள், சைவ, வைணவ ஆய்வு நூல்கள், முக்கிய திருக்கோயில்களின் கல்வெட்டுத் தரவுகளுடன் கூடிய நூல்கள், கிராமப்புற தெய்வங்களின் வரலாறுகளுடன் பாராயணப் பாடல்கள் என புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 500 ஆன்மிக நூல்களை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்டாா்.

இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறைச் செயலா் க.மணிவாசன், இந்து சமய அறநிலையங்கள் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →