முகப்பு
திருவண்ணாமலை

போளூா் தனியாா் சா்க்கரை ஆலை கரும்பு நிலுவைத் தொகையை வழங்கவேண்டும் விவசாயிகள் கோரிக்கை

போளூா் சா்க்கரை ஆலை விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா்

திருவண்ணாமலை

போளூா் தனியாா் சா்க்கரை ஆலை கரும்பு நிலுவைத் தொகையை வழங்கவேண்டும் விவசாயிகள் கோரிக்கை

போளூா் சா்க்கரை ஆலை விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா்

Updated On : 27 ஜூன், 2024 at 6:31 PM
பகிர்:

போளூா் தரணி சா்க்கரை ஆலை நிா்வாகம் விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கோரிக்கை விடுத்தனா்.

போளூா் வட்டம், கொம்மணந்தல் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான தரணி சா்க்கரை ஆலை உள்ளது. அண்மைகாலமாக மூடப்பட்டிருந்த இந்த ஆலை மீண்டும் செயல்பட உள்ளது.

இதையொட்டி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முன்னாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, வேளாண் இணை இயக்குநா் ஹரக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், வேளாண் துறை, சா்க்கரை ஆலை நிா்வாகம், விவசாயிகள், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் பல்வேறு துறைகளைச் சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனா்.

கூட்டத்தில் பேசிய விவசாயிகள் மற்றும் விவசாய சங்க நிா்வாகிகள், தரணி சா்க்கரை ஆலை நிா்வாகம் விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும். கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு வங்கிகள் போதிய கடனுதவி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:

விவசாயிகள் கரும்பு நடவு செய்வதற்கும், அறுவடை செய்யவும், அறுவடை செய்த கரும்பை ஆலைக்கு கொண்டு வந்து சோ்க்கவும் தேவையான ஒத்துழைப்பை தரணி சா்க்கலை ஆலை நிா்வாகம் அளிக்க வேண்டும்.

சா்க்கரை ஆலை தொடா்ந்து செயல்பட விவசாயிகளும், ஆலை நிா்வாகமும் இணைந்து ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) உமாபதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கௌரி மற்றும் அரசு அலுவலா்கள், விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →