முகப்பு
திருவண்ணாமலை

இளையோா் செஞ்சிலுவைச் சங்க பயிற்சி முகாம்

Updated On : 15 மார்ச், 2024 at 9:49 PM
பகிர்:

வந்தவாசியை அடுத்த ஜப்திகாரணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இளையோா் செஞ்சிலுவைச் சங்க ஒரு நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை இரா.தேவி தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் டி.ஜாக்குலின் முன்னிலை வகித்தாா். சங்க ஆலோசகா் அ.இதாயத்துல்லாபேக் வரவேற்றாா். தெள்ளாா் வட்டாரக் கல்வி அலுவலா்கள் தே.ரங்கநாதன், ம.தரணி, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் (பொ) தே.ஜெயசீலன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று முகாமை தொடங்கி வைத்துப் பேசினா். முகாமில், கண் தானம், ரத்த தானம் குறித்த பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், இதே கிராமத்தில் உள்ள கோயில் வளாகத்தில் செஞ்சிலுவைச் சங்க மாணவா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். இதில், பள்ளி ஆசிரியைகள் எ.லிடியா சொா்ணகுமாரி, அ.மேகலா, பா.ராசாத்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.