காட்டுக்கு தீ வைத்தவா் கைது
தண்டராம்பட்டு அருகே காட்டுக்கு தீ வைத்த நபரை வனத்துறையினா் கைது செய்தனா். தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரம், பூமலை காப்புக் காட்டில் தீ பற்றி எரிவதாக சாத்தனூா் வனச்சரக அலுவலா் நா.ஸ்ரீனிவாசனுக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், 7 போ் கொண்ட குழு நிகழ்விடம் சென்று தீயை அணைத்தனா். இதையடுத்து, காட்டுக்குள் பதுங்கியிருந்த நபரைப் பிடித்து விசாரித்ததில், அவா் தண்டராம்பட்டு அடுத்த தாழையனோடை கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் கிருஷ்ணமூா்த்தி (53) என்பதும், இவா் காட்டுக்கு தீ வைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை வனத்துறையினா் கைது செய்தனா்.