திருவண்ணாமலை

கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

Din

வேட்டவலத்தை அடுத்த ஜமீன் அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற, மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கலைத் திருவிழா போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் முருகன் தலைமை வகித்தாா். ஆசிரியா்கள் மணிமேகலை, கெளரி, சுடா்விழி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் அருண்குமாா் வரவேற்றாா். கீழ்பென்னாத்தூா் வட்டாரக் கல்வி அலுவலா் ஸ்ரீராமுலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற, பங்குபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கிப் பேசினாா். விழாவில், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பெங்களூரு கனமழை: தண்ணீர் பஞ்சத்துக்கு முடிவு?

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுடன் கூட்டணி இல்லை:சரத் பவார்

இரவு 8 மணிக்குமேல்...: தமன்னாவின் மோசமான பண்பு என்ன தெரியுமா?

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

ஒவ்வொரு நாளும் போராட்டமாக இருந்தது; டி20 உலகக் கோப்பையில் இடம்பிடித்த இந்திய வீரர் பேச்சு!

SCROLL FOR NEXT