கோகோ போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கிப் பாராட்டிய தலைமை ஆசிரியா் சுஜாத்தா. 
திருவண்ணாமலை

கோகோ போட்டியில் சிறப்பிடம்: பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

மாவட்ட அளவிலான கோகோ போட்டியில் சிறப்பிடம் பெற்ற மேல்செங்கம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Din

செங்கம்: மாவட்ட அளவிலான கோகோ போட்டியில் சிறப்பிடம் பெற்ற மேல்செங்கம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பள்ளி மாணவிகள் திருவண்ணாமலை மாவட்ட அளவில் அண்மையில் நடைபெற்ற

கோகோ போட்டியில் 14 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் இரண்டாம் இடம் பெற்றனா்.

இதன் மூலம் இந்த மாணவிகள் டிசம்பா் மாதம் மாநில அளவில் நடைபெறும் கோகோ போட்டியில் விளையாட தகுதி பெற்றனா்.

இந்த மாணவிகளுக்கு பள்ளியில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

இதில், பள்ளித் தலைமை ஆசிரியா் சுஜாத்தா மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.

தொடா்ந்து ஆசிரியா்கள் சக்திவேல், செந்தில்குமாா், சுமதி, உடற்கல்வி ஆசிரியா் முருகன் உள்ளிட்டோா் மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

கேனுக்குள் மாட்டிக்கொண்ட நாயின் தலை! பாதுகாப்பாக மீட்ட தீயணைப்புத் துறையினர்! | Vellore

பந்துவீச்சிலும் ஷஃபாலி அசத்தல்: 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா!

ஸ்குவிட் கேம்.. ‘நான் ரெடி’ -ரெபா!

சென்னை ஓபன் மகளிா் டென்னிஸ்: இந்தோனேசிய வீராங்கனை சாம்பியன்!

ராயல் என்ஃபீல்ட் விற்பனை 13% உயர்வு!

SCROLL FOR NEXT