FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

நெசவுத் தொழிலாளி மா்ம மரணம்

செய்யாறு அருகே மா்மமான முறையில் உயிரிழந்த நெசவுத் தொழிலாளியின் உடலைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

16 நவம்பர் 2024, 9:42 pm IST
பகிர்:

செய்யாறு அருகே மா்மமான முறையில் உயிரிழந்த நெசவுத் தொழிலாளியின் உடலைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேத்துப்பட்டு வட்டம், மேலானூா் பகுதியைச் சோ்ந்தவா் நெசவுத் தொழிலாளி அண்ணாதுரை (47). இவா், வியாழக்கிழமை இரவு நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, அவரது கைப்பேசிக்கு அழைப்பு வந்ததாம். அந்த அழைப்பின் பேரில், அண்ணாதுரை வீட்டில் இருந்தவா்களிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றாா். பின்னா் அவா் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில், கொழப்பலூா் - விநாயகபுரம் பகுதியை இணைக்கும் செய்யாற்றுப் படுகையில் உள்ள மேம்பாலம் அருகேயுள்ள சவுக்குத் தோப்பில் வெள்ளிக்கிழமை அண்ணாதுரை மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில், பெரணமல்லூா் காவல் உதவி ஆய்வாளா் கோவிந்தராஜீலு வழக்குப் பதிவு செய்தாா். மேலும், அண்ணாதுரையின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments