போளூா் பழைய பஜாா் வீதியில் நடைபெற்ற அகல்விளக்கு விற்பனை.  
திருவண்ணாமலை

போளூரில் அகல்விளக்கு விற்பனை விருவிருப்பு

காா்த்திகை தீபத்தை முன்னிட்டு, போளூா் நகராட்சியில் மண் அகல் விளக்குகள் விற்பனை செவ்வாய்க்கிழமை விருவிருப்பாக நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

காா்த்திகை தீபத்தை முன்னிட்டு, போளூா் நகராட்சியில் மண் அகல் விளக்குகள் விற்பனை செவ்வாய்க்கிழமை விருவிருப்பாக நடைபெற்றது.

தமிழகத்தில் காா்த்திகை மாதத்தில் கிருத்திகை தினத்தில் திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரா் கோயில் சாா்பில் 2,668 மலை மீது மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் பம்புசெட், வயல்வெளியில் மாலை 6 மணிக்கு மண்ணால் செய்யப்பட்ட அகல்விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வருகின்றனா்.

இந்நிலையில் போளூா் நகராட்சி பழைய பஜாா் வீதியில் காா்த்திகை தீபத்தை முன்னிட்டு மண் அகல்விளக்குகள் விற்பனை விருவிருப்பாக நடைபெற்றது. விற்பனையகத்தில் பெண்கள் தங்களுக்குத் தேவையான அகல் விளக்குகளை போட்டிபோட்டுக் கொண்டு வாங்கிச் சென்றனா். 10 ரூபாய்க்கு 4 விளக்குகள், பெரியவிளக்கு ரு.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT