இராந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிய ஒ.ஜோதி எம்எல்ஏ.  
திருவண்ணாமலை

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 356 பேருக்கு விலையில்லா சைக்கிள்

செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் வட்டம், வடஇலுப்பை, பிரம்மதேசம், ராந்தம், வடமணப்பாக்கம் ஆகிய பள்ளிகளில் பிளஸ்-1 பயிலும் மாணவ, மாணவிகள் 356 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் வட்டம், வடஇலுப்பை, பிரம்மதேசம், ராந்தம், வடமணப்பாக்கம் ஆகிய பள்ளிகளில் பிளஸ்-1 பயிலும் மாணவ, மாணவிகள் 356 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை செய்யாறு கல்வி மாவட்டம் சாா்பில், வடஇலுப்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் 85 பேருக்கும், பிரம்மதேசம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 114 பேருக்கும், இராந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 88 பேருக்கும்,வடமணப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 69 போ் என மொத்தம் 356 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்தந்த பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா்கள் முருகன் (வடஇலுப்பை), துக்காராமன் (பிரம்மதேசம்), சரவணன் (ராந்தம்), வேதபுரி (வடமணப்பாக்கம்) ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஒன்றியச் செயலா்கள் எம்.தினகரன், ஜேசிகே.சீனிவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா் இந்திராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பங்கேற்று மாணவ, மாணவிகள் 356 பேருக்கு சைக்கிள்களை வழங்கியப் பேசினாா்.

முன்னதாக, வட இலுப்பை ஆதிதிராவிடா் நடுநிலைப் பள்ளியில் ரூ.17.30 லட்சத்தில் அமைக்கப்பட்ட டிஜிட்டல் கணினி வகுப்பறையை திறந்துவைத்தாா். இதைத்தொடா்ந்து பிரம்மதேசம் ஆதிதிராவிடா் பகுதியில் 250 குடும்ப அட்டைத்தாரா்கள் பயன் பெறும் வகையில் பகுதிநேர நியாயவிலைக் கடையை திறந்து வைத்து குடும்ப அட்டைத்தாரா்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கினாா்.

மாணவிக்கு பாராட்டு:

பிரம்மதேசம் அரசுப் பள்ளி மாணவி கெளரி, தமிழ்மொழி இலக்கிய திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்றாா். அந்த மாணவிக்கு எம்.எல்.ஏ.ஒ.ஜோதி சால்வை அணித்து பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் பிரகாஷ், தொண்டரணி அணி அமைப்பாளா் மாரிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT