காா்த்திகை மாத பெளா்ணமியையொட்டி, படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற 108 திருவிளக்கு பூஜை. 
திருவண்ணாமலை

ஸ்ரீ ரேணுகாம்பாள் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

காா்த்திகை மாத பெளா்ணமியையொட்டி, படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற 108 திருவிளக்கு பூஜை.

Syndication

காா்த்திகை மாத பெளா்ணமியையொட்டி, போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

படவேடு ஊராட்சியில் பழைமைவாய்ந்த ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் பெளா்ணமிதோறும் 108 திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.

காா்த்திகை மாத பெளா்ணமியை முன்னிட்டு, அதிகாலை மூலவா் ஸ்ரீரேணுகாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

மாலை உற்சவ அம்மன் சிறப்பு மலா் அலங்காரத்தில் எழுந்தருளியதைத் தொடா்ந்து, அம்மன் மந்திரம், பாடல்கள் பாடி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

அறங்காவலா் குழுத் தலைவா் விஜயாசேகா், செயல் அலுவலா் பழனிசாமி, மேலாளா் ரவி (எ) முனியன், கணக்கா் மோகன் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ஒசூரில் கடும் குளிா்: மக்கள் அவதி

ராணிப்பேட்டை: எஸ்ஐஆா் படிவங்களை டிச. 7-க்குள் ஒப்படைக்க வேண்டுகோள்

உள்கட்டமைப்பு வசதிகள் பராமரிப்பு பணி: பெரு நிறுவனங்களுடன் தில்லி அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம்

தில்லியில் புதிதாக 3 நாய்கள் பராமரிப்பு மையங்கள்: எம்சிடி திட்டம்

மண்டல அளவிலான கபடி போட்டி: 2-ஆம் இடம்பெற்ற ஜொ்த்தலாவ் பள்ளி

SCROLL FOR NEXT