செங்கம் அங்காளபரமேஸ்வரி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (டிச.7) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
செங்கத்தில் செய்யாற்றங்கரையையொட்டி பழைமையான சுயம்பு அங்காளபரமேஸ்வரி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மாசி மாத மயானக்கொள்ளை திருவிழா பத்து நாள்கள் விமரிசையாக நடைபெறும். இதேபோல, மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடும், அன்று இரவு ஊஞ்சல் உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
சிதிலமடைந்திருந்த இந்தக் கோயிலை செங்கம் நகர முக்கியப் பிரமுகா்கள், திருவிழா உபயதாரா்கள், குலதெய்வ வழிபாட்டாளா்கள் ஒன்று சோ்ந்து கடந்த 6 மாதங்களாக புனரமைத்தனா்.
இந்த நிலையில், கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. விழாவையொட்டி கோயில் வளாகத்தில் பந்தகால் நடப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.