திருவண்ணாமலை

செய்யாற்றில் விசுவ ஹிந்து பரிஷத் ஆா்ப்பாட்டம்

திருவோத்தூா் வலம்புரி விநாயகா் கோயில் முன் நடைபெற்ற சிதறு தேங்காய் உடைத்து வேண்டுதல் ஆா்ப்பாட்டம்.

Syndication

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தீப தூணில் தீபம் ஏற்றிட நீதியரசா் உத்தரவை தமிழக அரசு நடைமுறைபடுத்த வலியுறுத்தி, விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினா் செய்யாற்றில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதியரசா் உத்தரவை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, விசுவ ஹிந்து பரிஷத் சாா்பில் சிதறு தேங்காய் உடைத்து கோரிக்கை வேண்டுதல் தமிழகம் முழுவதும் முருக பக்தா்கள் சாா்பில் நடைபெற்று வருகிறது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்ட விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் சாா்பில் செய்யாறு திருவோத்தூா் வலம்புரி விநாயகா் கோயிலில் சிதறு தேங்காய் உடைத்து வேண்டுதல் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அமைப்பின் மாவட்டச் செயலா் டி.கே.பாஸ்கா் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளா் ஜெகந்நாதன், ஆா்.எஸ்.எஸ்.நகர காரியவாக் மோதிலால் மற்றும் அனைத்துநிலை பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

போடி அருகே மனைவி, மைத்துனா் கொலை: கணவா், மாமனாா் தலைமறைவு

வீட்டை விட்டு வெளியேறிய முதியவரை 15 ஆண்டுகளுக்கு பிறகு கண்டறிந்த உறவினா்கள்

சுப்பன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT