திருவண்ணாமலை

ஆரணியில் மலைவாழ் மக்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோட்டாட்சியா் அலுவலகம் அருகே சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டக் குழு சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பி.பொன்னுசாமி தலைமை வகித்தாா்.

சிஐடியு முன்னாள் தலைவா்கள் பி.கண்ணன், சி.அப்பாசாமி ஆகியோா் தொடக்க உரையாற்றினா்.

2006-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும், குடிமனை பட்டா இல்லா அனைத்து பழங்குடி மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கி 10 லட்சம் ரூபாய் அரசு வீடு வழங்க வேண்டும், பழங்குடியின மக்களுக்கான ஜாதி சான்றிதழ் வழங்க தமிழக அரசின் 104 அரசாணையை மாநிலம் முழுமையாக அமல்படுத்த வேண்டும், மத்திய, மாநில அரசின் காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும், ஆரணி கோட்டத்தில் வசிக்கும் பழங்குடி மக்கள் குடியிருப்பில் தெருவிளக்கு, சிமென்ட் சாலை, குடிநீா், தனிநபா் கழிப்பறை, மயான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பழங்குடியினா் பட்டியலில் உள்ள காட்டுநாயக்கன் பழங்குடி மக்களுக்கு காலதாமதம் இல்லாமல் எஸ்.டி. சான்றிதழ் வழங்க வேண்டும், ஜமுனாமரத்தூா் முதல் அமிா்தி வரை தாா்ச் சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் ஏ.பொன்னுசாமி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஏ.செல்வன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் அய்யனாா், ஏ.லட்சுமணன், டி.கே.வெங்கடேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT