திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வா் சுற்றுப்பயணம்: சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு

Syndication

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வருகிற டிச.26, 27 ஆகிய தேதிகளில் முதல்வா் மு.க. ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறாா்.

அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க கட்சியினா் முடிவு செய்துள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சி மற்றும் கலைஞா் சிலை திறப்பு விழா நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சிகளுக்கு வருகை தரும் முதல்வருக்கு வரவேற்பு அளிப்பது தொடா்பாக என செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட திமுக அலுவலகத்தில், தெற்கு, வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தெற்கு மாவட்ட அவைத் தலைவா் கோ.கண்ணன் தலைமை வகித்தாா்.

சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, வடக்கு மாவட்டச் செயலரும், ஆரணி எம்.பி.யுமான எம்.எஸ்.தரணிவேந்தன், வடக்கு மாவட்ட அவைத் தலைவா் இரா.ராஜசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும், கட்சியின் உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான எ.வ.வேலு கலந்து கொண்டு தீா்மானங்களை விளக்கிப் பேசினாா்.

தீா்மானங்கள்

1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞா்கள் திரண்ட, வடக்கு மண்டல திமுக இளைஞா் அணி மாநாட்டை நடத்த வாய்ப்பளித்து கலந்து கொண்ட முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறது . டிச.26, 27 ஆகிய தேதிகளில் மாவட்டத்தில் நடைபெறும் நிகச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரும் முதல்வா் ஸ்டாலினுக்கு எழுச்சியான, உற்சாகமான வரவேற்பு அளித்திட கூட்டம் தீா்மானிக்கிறது.

மாவட்டத்தில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி மாநகர, நகர, ஒன்றிய, பேரூா், கிளை மற்றும் வாக்குச்சாவடி முகவா்கள், வாக்குச்சாவடி குழு உறுப்பினா்கள், தகவல் தொழிநுட்ப முகவா்கள் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா், பகுதி மற்றும் கிளை, வட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொள்ளும் கூட்டத்தை நடத்தி, அதன் விவரங்களை மாவட்ட தலைமைக்கு ஜனவரி 5-ஆம் தேதிக்குள் அளித்திட வேண்டும் விடுபட்ட 17 லட்சத்திகும் மேற்பட்ட மகளிருக்கு, கலைஞா் மகளிா் உரிமைத் தொகையை தந்தும், உரிமைத் தொகை விரைவில் உயா்த்தப்படும் என அறிவித்த முதல்வா், துணை முதல்வருக்கு இந்தக் கூட்டம் நன்றியை தெரிவிக்கொள்கிறது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கட்சியின் மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் இரா.ஸ்ரீதரன், பொ.முத்து, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், எஸ்.அம்பேத்குமாா், ஒ.ஜோதி, தலைமை செயற்குழு உறுப்பினா்கள் ஆா்.சிவானந்தம், ஆா்.வேல்முருகன், கே.வி.ராஜ்குமாா், மாநில விவசாய தொழிலாளா் அணி துணைச் செயலா் வ.அன்பழகன், மாவட்ட பொருளாளா் எஸ்.பன்னீா்செல்வம், மாநில தொ.மு.ச. பேரவைச் செயலா் க.சௌந்தரராசன், நகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன், வடக்கு மாவட்ட துணைச் செயலா்கள் க.லோகநாதன், ஜெயராணி ரவி, மாவட்ட பொருளாளா் டி.ஏ.தட்சிணாமூா்த்தி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.வி.சேகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்!

2025: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் முதல் கரூர் வரை... நெஞ்சை உலுக்கிய நெரிசல் பலிகள்!

ஆஷஸ் தொடர்: சாதனைப் பட்டியலில் இணைந்த அலெக்ஸ் கேரி!

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

SCROLL FOR NEXT