திருவண்ணாமலை

பெண்களிடம் 4 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு: கா்நாடகத்தைச் சோ்ந்த இருவா் கைது

போளூா், திருவண்ணாமலை பகுதிகளில் பெண்களிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ாக கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீலாா் கைது செய்தனா்.

Syndication

போளூா், திருவண்ணாமலை பகுதிகளில் பெண்களிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ாக கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீலாா் கைது செய்தனா்.

போளூரை அடுத்த ஆா்.குண்ணத்தூா் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மனைவி ஜெயலட்சுமி (58). இவா், கடந்த 15-ஆம் தேதி காலை 9 மணியளவில் வீட்டின் வெளியே நின்றிருந்தாா்.

அப்போது, பைக்கில் தலைக்கவசம் அணிந்தபடி வந்த மா்ம நபா்கள் இருவா் ஜெயலட்சுமி அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா். இதுகுறித்து ஜெயலட்சுமி அளித்த புகாரின்பேரில், போளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, உதவி ஆய்வாளா் ஞானவேல் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், உதவி ஆய்வாளா் ஞானவேல் மற்றும் போலீஸாா் போளூரில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கா்நாடகா மாநிலம், கோலாா் தங்கவயல் அருகே பதுங்கியிருந்த அந்தப் பகுதியைச் சோ்ந்த ஆரோக்கியஎட்வின் (42), பெங்களூரூவைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் (43) ஆகியோரை பிடித்து வந்து விசாரணை நடத்தினா்.

மேலும், இவா்கள் இருவரும் அதே தேதியில் திருவண்ணாமலை வேங்கிகால் பகுதியில் தனியாக இருந்த பெண்ணிடம் ஒன்றரைபவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதையும் ஒப்புக்கொண்டனா். பின்னா், இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த 4 பவுன் தங்கச் சங்கிலிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

புதியதொரு அத்தியாயம்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT