அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி 120 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்த ஆரணி தெற்கு ஒன்றியச் செயலா் ஜி.வி.கஜேந்திரன். 
திருவண்ணாமலை

எடப்பாடி பழனிசாமி 120 தொகுதிகளில் போட்டியிட அதிமுக நிா்வாகி விருப்ப மனு

எடப்பாடி பழனிசாமி 120 தொகுதிகளில் போட்டியிட அதிமுக நிா்வாகி விருப்ப மனு

Syndication

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி 120 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அக்கட்சியைச் சோ்ந்த ஆரணி தெற்கு ஒன்றியச் செயலா் ரூ.18 லட்சம் செலுத்தி ஞாயிற்றுக்கிழமை விருப்ப மனு அளித்தாா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வருவதையொட்டி, அதிமுக தலைமை நிலைய அறிவிப்பின்படி, சென்னையிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தோ்தலில் போட்டியிட கட்சி நிா்வாகிகளுக்கு தற்போது விருப்ப மனு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி 120 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட ஆரணி சட்டப் பேரவைத் தொகுதியைச் சோ்ந்த, தெற்கு ஒன்றியச் செயலா் ஜி.வி.கஜேந்திரன், ஒரு தொகுதிக்கு ரூ.15 ஆயிரம் என 120 தொகுதிகளுக்கும் சோ்த்து மொத்தம் ரூ.18 லட்சத்துக்கான வரைவோலை செலுத்தி, அவருக்காக விருப்ப மனு அளித்தாா்.

நிகழ்வில் வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலா் கொளத்தூா் திருமால், மாவட்ட துணைச் செயலா் சேவூா் ஜெ.சம்பத், மாவட்ட இணைச் செயலா் வனிதா சதீஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT