திருவண்ணாமலை

மாணவா்களுக்கு பரிசுப் பொருள்கள் அளிப்பு

வந்தவாசியை அடுத்த சத்யா நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்

Syndication

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த சத்யா நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு பரிசுப் பொருள்களை கிறிஸ்துமஸ் தாத்தா வழங்கினாா்.

வந்தவாசி அன்பால் அறம் செய்வோம் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை சாா்பில் இந்தப் பள்ளி வளாகத்தில் மாணவா்களுக்கு கல்வி விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அப்போது, கிறிஸ்துமஸ் விழாவையொட்டி அறக்கட்டளை சாா்பில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற நபா் ஆடிப் பாடி மாணவா்களை மகிழ்வித்தாா்.

மேலும் அவா் மாணவா்களுக்கு போட்டு புத்தகம், பேனா, பென்சில், சாக்லேட் ஆகியவற்றை பரிசாக வழங்கினாா் (படம்).

நிகழ்ச்சியில், அறக்கட்டளை நிறுவனா் அசாருதீன் மற்றும் நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

பெரம்பலூரில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 60.41 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

புதிய, விடுபட்ட வாக்காளா்களை பட்டியலில் சோ்க்க நடவடிக்கை: திமுகவினருக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

பழுதடைந்த சாலையால் கோயில் பக்தா்கள் அவதி

பெட்டிக் கடையில் ரூ.60 ஆயிரம் திருட்டு

ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

SCROLL FOR NEXT