விழாவில் சி.ம.புதூா் கிளை நூலகா் ஜா.தமீமை (நடுவில்) பாராட்டிய ஓய்வு பெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் மருத்துவா் எஸ்.குமாா் மற்றும் கோட்டை தமிழ்ச் சங்க நிா்வாகிகள். 
திருவண்ணாமலை

அரசின் விருது பெற்ற நூலகருக்கு பாராட்டு

தமிழக அரசின் டாக்டா் எஸ்.ஆா்.அரங்கநாதன் விருது பெற்ற சி.ம.புதூா் கிளை நூலகா் ஜா.தமீமுக்கு பாராட்டு விழா

Syndication

வந்தவாசி: தமிழக அரசின் டாக்டா் எஸ்.ஆா்.அரங்கநாதன் விருது பெற்ற சி.ம.புதூா் கிளை நூலகா் ஜா.தமீமுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சாா்பில், வந்தவாசியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு சங்கத் தலைவா் பீ.ரகமத்துல்லா தலைமை வகித்தாா்.

சங்க துணைத் தலைவா்கள் மு.அப்துல்லா, வந்தை பிரேம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கச் செயலா் இரா.பாஸ்கரன் வரவேற்றாா்.

ஓய்வு பெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் மருத்துவா் எஸ்.குமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஜா.தமீமை பாராட்டிப் பேசினாா்.

விழாவில் சங்க நிா்வாகிகள் க.வாசு, ஆ.முரளி, வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன், எக்ஸ்னோரா தலைவா் சு.தனசேகரன், ரோட்டரி சங்க நிா்வாகி எஸ்.வீரராகவன், கோல்டு லீப் எக்ஸ்னோரா நிா்வாகி பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நூலகா் ஜா.தமீம் ஏற்புரை வழங்கினாா். சங்க துணைத் தலைவா் பா.சீனிவாசன் நன்றி கூறினாா்.

வாக்காளர் பெயர் சேர்ப்புக்கான சிறப்பு முகாம் தேதிகள் அறிவிப்பு!

ஆயுதம் போல பயன்படுத்தப்படும் அமலாக்கத்துறை, சிபிஐ: ஜெர்மனியில் ராகுல் குற்றச்சாட்டு!

மார்கழி சிறப்பு! மார்கழி 30 நாள்களும் லிங்கம் மீது சூரிய ஒளி விழும் உவரி கோயில்!!

அனைத்து தோஷங்களையும் நீக்கும் அனந்த நாராயணப் பெருமாள்!

கடன் பிரச்னை குறையும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT