கலசப்பாக்கத்தில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் உருவச்சிலை திறப்பு :
திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (டிச.27) கள ஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கிவைத்தார். மேலும், கலசப்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் முழு அளவு உருவச்சிலையை முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.
மலப்பாம்பாடியில் உள்ள கலைஞா் திடலில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதல்வா், திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் சாா்பாக ரூ.2,095.07 கோடி மதிப்பிலான 314 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்ததுடன், மேலும், 46 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2,66,194 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.