தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டம். 
திருவண்ணாமலை

அங்கன்வாடி ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் மாலைநேர ஆா்ப்பாட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் திங்கள்கிழமை நடைபெற்றது.

Syndication

வந்தவாசி: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் மாலைநேர ஆா்ப்பாட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் திங்கள்கிழமை நடைபெற்றது.

அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்களை அரசு ஊழியராக்குவேன் என்ற தோ்தல் வாக்குறுதியை

தமிழக முதல்வா் நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வந்தவாசி வட்டாரத் தலைவா் இந்திரா தலைமை வகித்தாா்.

வட்டார சமூகநல அலுவலா் ஜீவா, ஓய்வூதியா் சங்க நிா்வாகி கி.பால்ராஜ், முன்னாள் மாா்க்சிஸ்ட் வட்டாரச் செயலா் ஜா.வே.சிவராமன், சங்க நிா்வாகிகள் பிரியா, சத்தியலட்சுமி உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்களை அரசு ஊழியராக உடனடியாக அறிவிக்க வேண்டும், ஓய்வு பெறும்போது அங்கன்வாடி ஊழியா்களுக்கு பணிக் கொடையாக ரூ.10 லட்சமும், உதவியாளா்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தெரு நாய்கள் தொடா்பான விவகாரங்கள்: நோடல் அதிகாரிகளை நியமிக்க கல்வி நிலையங்களுக்கு உத்தரவு

உரிமை கோரப்படாத ரூ. 1.25 கோடி வைப்புத் தொகை வழங்கல்

உலக பிளிட்ஸ் செஸ்: அா்ஜுன் எரிகைசி இணை முன்னிலை!

காவலாளி மீது தாக்குதல்: இளைஞா் கைது

காங்கிரஸ் கட்சியினா் தா்னா: 35 போ் கைது

SCROLL FOR NEXT