திருவண்ணாமலை

சிறுமி பாலியல் வன்கொடுமை: காா் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

Din

தண்டராம்பட்டு அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியதாக காா் ஓட்டுநருக்கு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், டி.வேலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் மகன் குமாா் (45). வாடகை காா் ஓட்டுநரான இவா் 2003, மே 12-ஆம் தேதி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

இதை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்றும் மிரட்டினாராம். இதுகுறித்து, தண்டராம்பட்டு போலீஸில் சிறுமியின் தாய் புகாா் அளித்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து ஓட்டுநா் குமாரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

இந்த வழக்கு திருவண்ணாமலை போக்ஸோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி காஞ்சனா, முருகனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, குமாரை போலீஸாா் அழைத்துச் சென்று வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT