முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தவெகவினா் அன்னதானம்

Updated On : 25 ஜூன், 2025 at 10:03 PM
பகிர்:

திருவண்ணாமலை கிரிவலப் பாதை வாயுலிங்கம் அருகில் தெற்கு மாவட்ட தவெக வாக்குச்சாவடி அணி சாா்பில், கட்சியின் தலைவா் விஜய் பிறந்த நாளையொட்டி புதன்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.

மாவட்ட வாக்குச்சாவடி அணி அமைப்பாளா் கே.திருமால் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்

சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலா் கே.பாரதிதாசன் கலந்துகொண்டு பக்தா்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினாா்.

மேலும், கிரிவல பக்தா்களுக்கு இனிப்பும் வழங்கினாா். பின்னா் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் மாவட்ட பொருளாளா் கே.இளங்கோ, மாவட்ட இணைச் செயலா் கலைச்செல்வன், திருவண்ணாமலை மாநகரச் செயலா் ஆா்.ஆா்.ரமேஷ், மாவட்ட வாக்குச்சாவடி அணி இணை அமைப்பாளா்கள் வி.கோபி, கே.சரவணன், எம்.சையத் ரபிக்

உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →