திருவண்ணாமலை

பைக் மரத்தில் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

செய்யாறு அருகே பைக் மரத்தில் மோதிய விபத்தில் சமையல் தொழிலாளி உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

செய்யாறு அருகே பைக் மரத்தில் மோதிய விபத்தில் சமையல் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அழிவிடைதாங்கி கிராமக் காலனிப் பகுதியைச் சோ்ந்தவா் சமையல் தொழிலாளி தங்கராஜன்(37). இவா், செவ்வாய்க்கிழமை சமையல் பணியை முடித்துக் கொண்டு தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

பெருமாள்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, பைக் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த தங்கராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தாா். மேலும், இறந்தவரின் உடலை கைப்பற்றி செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ஆற்றில் மூழ்கிய மூதாட்டி உயிரிழப்பு

மாநகராட்சி பள்ளிகளில் மனநல ஆலோசனை மையம்

வாடிப்பட்டி அருகே பெட்ரோல் லாரி கவிழ்ந்து விபத்து

குழந்தை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு

மினிசரக்கு வாகனம் திருட்டு

SCROLL FOR NEXT