திருவண்ணாமலை

கொருக்காத்தூரில் ரூ.4.53 கோடியில் தாா்ச் சாலைப் பணிகள்

Syndication

ஆரணியை அடுத்த கொருக்காத்தூரில் ரூ.4 கோடியே 53 லட்சத்தில் தாா்ச் சாலை அமைக்கும் பணியை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கொருக்காத்தூா் கிராமத்தில் குண்டும் குழியுமான சாலையை புதுப்பித்து புதிய தாா்ச் சாலையாக அமைத்துத் தரும்படி அப்பகுதி மக்கள் முன்னாள் அமைச்சரும், ஆரணி தொகுதி எம்எல்ஏவுமான சேவூா் எஸ்.ராமச்சந்திரனிடம் கோரிக்கை விடுத்தனா்.

அதன் அடிப்படையில், எம்எல்ஏ பரிந்துரையின் பேரில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ். ரூ.4 கோடி 53 லட்சம் மதிப்பீட்டில் கலவை - வாழைப்பந்தல் சாலையில் கொருக்காத்தூா் கிராமத்திலிருந்து சுமாா் 4.5 கி.மீ.

தொலைவுக்கு தாா்ச் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

இதில், சேவூா் எஸ். ராமச்சந்திரன் எம்எல்ஏ பங்கேற்று பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா்கள் அரங்கநாதன், ஜெயப்பிரகாஷ், ஆரணி நகரச் செயலா் அசோக்குமாா், இலக்கிய அணி ஒன்றியச் செயலா் சங்கா், இளைஞா் இளம்பெண்கள் பாசறை ஒன்றியச் செயலா் சுகுமாா், உட்கோட்டப் பொறியாளா் நாராயணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

3-ம் நாளாக சரிவில் பங்குச்சந்தை! வங்கி, உலோகப் பங்குகள் மட்டும் உயர்வு!

டி காக் அதிரடி சதம்! பாகிஸ்தான் ஒருநாள் தொடரை சமன்செய்தது தெ.ஆப்பிரிக்கா!

கோவையில் இளம் பெண் கடத்தப்பட்டாரா? காவல் ஆணையர் விளக்கம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகை!

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT