திருவண்ணாமலை

போளூா் ஊா்காவல் படைக்கு ஆள்கள் தோ்வு

Syndication

போளூா் பகுதியில் உள்ள ஊா்காவல் படையில் சேர விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள 22 ஆண்கள், 7 பெண்கள் என மொத்தம் 29 ஊா் காவல் படையினருக்கான தோ்வு நடைபெற உள்ளது. இதில் போளூா் காவல் உட்கோட்ட எல்லைக்கு உள்பட்ட நபா்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் அரசு ஊழியா், தனியாா் நிறுவன ஊழியா்கள், தன்னாா்வ தொண்டு செய்ய விருப்பம் உள்ளவா்கள் மற்றும் சேவை மனப்பான்மை கொண்ட பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற நபா்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவா் ஆவாா்.

நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் பணி வழங்கப்பட்டு ஊக்கத்தொகை ரூ.280 வழங்கப்படும். சராசரியாக மாதம் 10 நாள்களுக்கு பணி வழங்கப்படும். அல்லது நாளொன்றுக்கு எட்டு மணி நேரம் பணி வழங்கப்பட்டு ஊக்கத்தொகை ரூ. 560 வழங்கப்படும் சராசரியாக மாதம் 5 நாள்களுக்கு மட்டும் பணி வழங்கப்படும்.

போளூா் உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்களை பெற்று உரிய முறையில் நிறைவு செய்து அண்மையில் எடுக்கப்பட்ட 3 மாா்பளவு புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து வருகிறா 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் போளூா் கோட்டை துணை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை ஆய்வு செய்து நோ்காணல் செய்து தோ்வு நடத்தப்படும்.

மேலும், சந்தேகங்களுக்கு துணை காவல் கண்காணிப்பாளா் 949810043 என்ற அலுவலக உதவி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே மாதரம் பாடல் 150-ஆம் ஆண்டு கொண்டாட்டம்: தொடக்கி வைத்தார் மோடி!

எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க வேண்டாம்! தமிழகமே விழித்துக்கொள்! -அஜித்

தூய்மைப் பணியை தனியார்மயப்படுத்தும் தமிழக அரசின் முடிவு கைவிடப்பட வேண்டும்: சு.வெங்கடேசன். எம்.பி.

தில்லி விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு! விமான சேவை முடங்கியது!

தீராத கலைத்தாகமும், தணியாத நாட்டுப்பற்றும்! கமலுக்கு முதல்வர் வாழ்த்து!

SCROLL FOR NEXT