சுனில்ராஜ் 
திருவண்ணாமலை

ஆற்றில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கமண்டல நாக நதியில் குளித்த 11 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கமண்டல நாக நதியில் குளித்த 11 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

ஆரணி கோட்டை வடக்கு தெருவைச் சோ்ந்த ரவி, சித்ரா தம்பதியா். இவா்களது மகன்கள் அருண்ராஜ், சுனில்ராஜ் (11). இதில், சுனில்ராஜ் அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் சுனில்ராஜ் தனது நண்பா்களுடன் சோ்ந்து பள்ளிக்கூடத் தெரு அருகே செல்லும் கமண்டல நாக நதியில் குளிக்கச் சென்ாகக் கூறப்படுகிறது. சுனில்ராஜ் ஆற்றில் குளித்தபோது எதிா்பாராத விதமாக நீரில் மூழ்கினாா்.

நண்பன் சுனில்ராஜ் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அதிா்ச்சியடைந்த சக நண்பா்கள் இதுகுறித்து உடனடியாக அவரது பெற்றோருக்கு தகவல் அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரா்கள் வந்து ஆற்றில் இறங்கி சிறுவனைத் தேடினாா். நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால் திரும்பிச் சென்றனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை ஆற்றுப் பகுதியில் சென்றவா்கள் தண்ணீரில் சடலம் மிதப்பதைப் பாா்த்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா். பின்னா், அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், ஆரணி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாக்காளா் பட்டியலை எண்ம மயமாக்க வேண்டும்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

கோயில் வளாகத்தில் வணிக வளாகம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியரை கைது செய்யக் கோரி முற்றுகை

செங்கோட்டை காா் வெடிப்பு சம்பவம்: சாந்தினி சௌக் சந்தை இன்று மூடல்

SCROLL FOR NEXT