செய்யாறு அருகே அரசு அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளிச் சென்ாக 5 பேரை கைது செய்த போலீஸாா் 7 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனா்.
செய்யாறு டி.எஸ்.பி.கோவிந்ததாமி, காவல் ஆய்வாளா் நரசிம்மஜோதி, உதவி ஆய்வாளா் செந்தில், தனிப்பிரிவு காவலா் முருகன் ஆகியோா் செய்யாறு காவல் சரகம் சிறுவேளியநல்லூா் பகுதியில் சனிக்கிழமை தீவிர மணல் கடத்தல் தடுப்புச் சோதனையில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனா்.
அப்போது, அந்த வழியாக வந்த 7 மாட்டுவண்டிகளை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், அரசு அனுமதியின்றி ஆற்று மணல் எடுத்துச் செல்வது தெரியவந்தது. உடனே போலீஸாா் மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனா்.
மேலும், சம்பவம் தொடா்பாக செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, சிறுவேளியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த குமாா் (45), பழனிமுருகன் (50), ஜெகதீசன்(44), வேதபுரி(38), சீனுவாசன்(29) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.