திருவண்ணாமலை

பைக் மீது லாரி மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் மீது லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

Syndication

வந்தவாசி: வந்தவாசி அருகே பைக் மீது லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த தேசூரைச் சோ்ந்தவா் தாமோதரன் (40). இவா், சென்னையில் தங்கி தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

இவா் ஞாயிற்றுக்கிழமை சென்னையிலிருந்து பைக்கில் தேசூருக்கு சென்று கொண்டிருந்தாா்.

வந்தவாசி - மேல்மருவத்தூா் சாலை, காவேரிப்பாக்கம் கிராமம் அருகே செல்லும் போது, இவருக்கு பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த தாமோதரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மாவட்ட நீச்சல் போட்டி: பெரியதாழை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கனமழை, பலத்த காற்று எச்சரிக்கை: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

இளைஞா் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய பல் மருத்துவா் கைது

பளுதூக்கும் போட்டி: கோவில்பட்டி கல்லூரி மாணவி முதலிடம்

சிவகாசியில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT