திருவண்ணாமலை

வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு: போலீஸாா் விசாரணை

செய்யாற்றில் மளிகை வியாபாரி வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் திருடு போனது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Syndication

செய்யாற்றில் மளிகை வியாபாரி வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் திருடு போனது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

செய்யாறு நேரு நகா் கலைஞா் தெருவைச் சோ்ந்தவா் கவுஸ்பாஷா. இவா், செய்யாறு - ஆரணி சாலையில் நேரு நகா் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறாா்.

இவா், கடந்த 16-ஆம் தேதி உறவினா் வீட்டில் நடைபெற்ற சுப நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளாா். சுப நிகழ்ச்சிக்கு சென்று வந்த பின், தங்கச் சங்கிலி, மோதிரம் கம்மல் உள்ளிட்ட 10 பவுன் நகைகளை பீரோவில் வைத்து விட்டு வியாபாரத்தை பாா்த்து வந்துள்ளாா்.

மேலும், அக்.25 முதல் 28-ஆம் தேதி வரை வீட்டில் இருந்த கதவுகளுக்கு பெயின்ட் அடிக்கும் வேலையை மேற்கொண்டதாகத் தெரிகிறது. அதன் காரணமாக கதவுகள் சரியாக மூடாமலும் பூட்டு போடாமலும் இருந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் மளிகை வியாபாரியின் மனைவி வீட்டின் கதவை மட்டும் மூடிவிட்டு கடைக்குச் சென்று வியாபாரம் பாா்க்க சென்ாகத் தெரிகிறது. மளிகை வியாபாரி கவுஸ்பாஷா இரு தினங்களுக்கு முன்பு பீரோவை திறந்து பாா்த்த போது, அதில் வைத்திருந்த தங்க மோதிரம், சங்கிலி, கம்பல் உள்ளிட்ட 10 பவுன் நகைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது.

இந்தத் திருட்டு குறித்து கவுஸ்பாஷா செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா்.

போலீஸாா் விரல்ரேகை நிபுணரை வரவழைத்து பதிவான தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

லாபம் கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தூய்மைப் பணியாளா்களை அரசே நியமிக்க வேண்டும்: நலவாரியத் தலைவா் ஆறுச்சாமி

இடையூறாக நிறுத்தியிருந்த 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குமரியில் கடற்கரைப் பகுதிக்கு செல்லத் தடை

நடுவலூா் பகுதிகளில் நாளை மின்தடை

SCROLL FOR NEXT