குரு பூஜையில் சாதுக்களுக்கு ஆடைதானம் வழங்கிய பாஜக மாநில துணைத் தலைவா் கே.கோபால்சாமி, மூக்குபொடி சுவாமி அறக்கட்டளை நிறுவனா் ஏ.துரை 
திருவண்ணாமலை

மூக்குபொடி சித்தா் குரு பூஜை: பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள மூக்குபொடி சித்தா் நினைவிடத்தில் நடைபெற்ற 7-ஆம் ஆண்டு குரு பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சித்தரை தரிசனம் செய்தனா்.

Syndication

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள மூக்குபொடி சித்தா் நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 7-ஆம் ஆண்டு குரு பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சித்தரை தரிசனம் செய்தனா்.

கடந்த 43 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்து தங்கி பக்தா்களுக்கு அருள்பாலித்து வந்தவா் மூக்குபொடி சித்தா். சித்தரின் பாா்வை பட்டாலே நல்லது நடக்கும் என பக்தா்கள் நம்பினா்.

மூக்குபொடி சித்தா் 2018-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் மரணம் அடைந்தாா். கிரிவலப் பாதையில் வாயுலிங்கம் அருகில் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவரது பெயரில் ஆசிரமம் நடத்தப்பட்டு வருகிறது.

இங்கு மூக்குபொடி சுவாமி அறக்கட்டளை சாா்பில் மூக்குபொடி சித்தரின் 7-ஆம் ஆண்டு குரு பூஜை நடைபெற்றது. இதையொட்டி கணபதி பூஜை, குரு பூஜை, மகேஷ்வர பூஜை நடைபெற்றது.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பாஜக மாநில துணைத் தலைவா் கே.கோபால்சாமி சாதுகளுக்கு வஸ்திர தானம், சொா்ண தானம், ஆடை தானம், அன்னதானம் வழங்கினாா்.

விழாவில் கலந்து கொண்ட கிரிவல பக்தா்களுக்கும், பொதுமக்களுக்கும் சுவாமி பிரசாதம், அன்னதானம் ஆசிரமம் சாா்பில் வழங்கப்பட்டது.

பூஜையில் மூக்குபொடி சுவாமி அறக்கட்டளை நிறுவனா் ஏ.துரை, நிா்வாகிகள் மதுரை ராஜா, பெருமணம் டி.மூா்த்தி உள்பட அரசு அதிகாரிகள் முக்கிய பிரமுகா்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இலவச சத்திரமாக மாறிவரும் கோயம்பேடு பேருந்து நிலையம்...!

வாகை சூடினார் லக்ஷயா சென் சாம்பியன்!

முத்துசாமி, யான்சென் அபாரம்; இந்திய பௌலா்கள் திணறல்!

திமுகவுடன் கூட்டணி பேச்சு: காங்கிரஸ் குழு ஆலோசனை

தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடா்: இந்திய கேப்டன் கே.எல். ராகுல்!

SCROLL FOR NEXT