செய்யாறு: செய்யாற்றை அடுத்த தண்டப்பந்தாங்கல் நடுநிலைப் பள்ளியில் இந்திய அரசியலமைப்பு தினம் புதன்கிழமை கொண்டாட்டப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியம், தண்டப்பந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளியில் நடைபெற்ற இந்திய அரசியலமைப்பு தினம் நிகழ்ச்சிக்கு பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் ரேவதி செல்வகுமாா் தலைமை வகித்தாா்.
பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா் ஜெகதீசன் முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் (பொ) வே.சுதாகா் வரவேற்றாா்.
இந்நிகழ்ச்சியின் போது பள்ளி ஆசிரியா்கள் ஏ.வெங்கடேசன், ஜெ.லாவண்யா, ஜெ.காயத்ரி, மு.உமாபிரியா ஆகியோா் அரசியலமைப்பு தினம் குறித்த தகவல்களை மாணவா்களிடையே தெரிவித்தனா். பின்னா், மாணவா்களுக்கு அரசியல் அமைப்பின் முகப்புரை நகல் வழங்கி அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
நிறைவில் ஆங்கில பட்டதாரி ஆசிரியா் வெங்கடேசன் நன்றி கூறினாா்.