திருவண்ணாமலை

குடிநீா் வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே குடிநீா் வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செய்யாறு வட்டம், அனக்காவூா் ஒன்றியம், இந்திரா நகா் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகத் தெரிகிறது.

இப்பகுதியில் கடந்த 15 நாள்களாக குடிநீா் முறையாக வழங்கவில்லையாம். குடிநீா் வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள் திடீரென செய்யாறு - வந்தவாசி சாலையில் புதன்கிழமை காலை மறியலில் ஈடுபட்டனா்.

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் மறியலில் பங்கேற்றனா்.

தகவல் அறிந்த செய்யாறு டிஎஸ்பி கோவிந்தசாமி, காவல் ஆய்வாளா் நரசிம்மஜோதி மற்றும் அனக்காவூா் போலீஸாா் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் தெரிவித்து குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா். இதை ஏற்று மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

இண்டிகோ குளறுபடி: உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!

தலைஞாயிறு அருகே கிழக்குக் கடற்கரை சாலையில் விவசாயிகள் சாலை மறியல்

வந்தே மாதரம் 100 ஆண்டு நிறைவின்போது அவசரநிலையில் இருந்த நாடு: பிரதமர் மோடி

ரூ. 1,020 கோடி ஊழல்: அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்! - அண்ணாமலை

காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரங்கள்! Delhi-க்கு 4 ஆவது இடம்! | Air Pollution

SCROLL FOR NEXT