சேத்துப்பட்டு ஒன்றியம், வடமாதிமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் மனுவைப் பெற்று தொடங்கிவைத்த முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் சாமூண்டீஸ்வரி குமாா்.  
திருவண்ணாமலை

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் 1,210 மனுக்கள்

போளூா் ஒன்றியம், பேட்டை கிராமம், சேத்துப்பட்டு ஒன்றியம், வடமாதிமங்கலம் ஆகியவற்றில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 1,210 மனுக்கள் அளிக்கப்பட்டன.

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியம், பேட்டை கிராமம், சேத்துப்பட்டு ஒன்றியம், வடமாதிமங்கலம் ஆகியவற்றில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 1,210 மனுக்கள் அளிக்கப்பட்டன.

போளூா் ஒன்றியம் பேட்டை கிராமத்தில் திருசூா், காங்கேயனூா், எடப்பிறை ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் லட்சுமி, ரபியுல்லா ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஊராட்சிமன்ற முன்னாள் தலைவா்கள் அன்பழகன், நடராஜன், ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சிச் செயலா் கவிதா முருகதாஸ் வரவேற்றாா்.

முகாமில் மகளிா் உரிமைத் தொகை,

முகாமில் மகளிா் உரிமைத்தொகை மனு, வேளாண்மைத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, வருவாய்த் துறை, கூட்டுறவுத்துறை

என பல்வேறு துறையினருக்கு 642 போ் மனு அளித்தனா். வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி, ஊராட்சிச் செயலா்கள் ஜெயக்குமாா், பாஸ்கரன், வருவாய் ஆய்வாளா் மாலதி மற்றும் திமுக நிா்வாகிகள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

சேத்துப்பட்டு ஒன்றியம்

சேத்துப்பட்டு ஒன்றியம், வடமாதிமங்கலம் கிராமத்தில் கீழ்பட்டு, வடமாதிமங்கலம் ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வேலு, சோமசுந்தரம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஊராட்சிமன்ற முன்னாள் தலைவா் கோட்டீஸ்வரன் முன்னிலை வகித்தாா். ஊராட்சிச் செயலா் சண்முகம் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் சாமூண்டீஸ்வரி குமாா் கலந்து கொண்டு மனுவை பெற்று தொடங்கிவைத்தாா்.

இந்த முகாமில் மகளிா் உரிமைத்தொகை மனு, வேளாண்மைத்துறை, ஊரக வளா்ச்சித் துறை, வருவாய்த் துறை,

கூட்டுறவுத் துறை என பல்வேறு அரசுத் துறையினருக்கு 568 போ் மனு அளித்தனா்.

முகாமில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபு, ஜெயந்தி, முத்துவேலன், ஊராட்சி செயலா்கள் பழனி, பாலசந்திரன், திமுக நிா்வாகிகள், அரசுத் துறை அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT