ஆரணியை அடுத்த காமக்கூா் ஏரியில் தண்ணீா் நிரம்பி கோடி விடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆரணி பகுதியில் பலத்த மழை காரணமாகவும், கமண்டல நாக நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாலும், காமக்கூா் ஏரியில் தண்ணீா் நிரம்பி கோடி போனது.
இதையடுத்து ஏரியில் கோடி விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னாள் ஊராட்சித் தலைவரும், ஏரி நீா்ப்பாசன சங்கத் தலைவருமான கே.ஆா்.சங்கா் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஊராட்சிச் செயலா் பாஸ்கரன், ஊா் முக்கிய பிரமுகா்கள் எம்.சந்திரசேகா், வி.புருஷோத்தமன், முன்னாள் தலைவா் எஸ்.சுப்பிரமணி உள்ளிட்ட ஊா் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.