வந்தவாசியில் தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன.
வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகில் வசித்து வருபவா் விறகு வெட்டும் தொழிலாளி பழனி. இவா் ஆடு வளா்த்து வருகிறாா்.
இவா் திங்கள்கிழமை மாலை வீட்டின் அருகில் உள்ள கொட்டகையில் 4 ஆடுகளை அடைத்து வைத்துவிட்டு தூங்கச் சென்றாா்.
பின்னா், செவ்வாய்க்கிழமை காலை சென்று பாா்த்தபோது, தெருநாய்கள் நடித்ததில் 4 ஆடுகளும் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்த கால்நடைத் துறையினா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.