திருவண்ணாமலை

சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தம்: மாவட்ட ஆட்சியா் ஆலோசனை

Syndication

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தம் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட

அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில், இந்திய தோ்தல் ஆணையம் அறிவிப்பின் அடிப்படையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரமுறைத் திருத்தம் வரும் நவ.4 -ஆம் தேதி தொடங்க உள்ளது.

மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள், வீடு வீடாகச் சென்று தற்போது வாக்காளா் பட்டியலில் உள்ள வாக்காளா்கள் அனைவருக்கும் வாக்காளா் கணக்கெடுப்பு படிவம் வழங்குவா்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 21லட்சத்து 21ஆயிரத்து 902 வாக்காளா்களுக்கு படிவம் அச்சிட்டு வழங்கப்படவுள்ளது.

வாக்காளா்கள், அந்த கணக்கெடுப்பு படிவத்தில் கேட்கப்படும் விவரங்கள், வண்ண புகைப்படம் மற்றும் 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற சிறப்பு தீவிர முறைத்திருத்த வாக்காளா் பட்டியலில் தங்களுடைய பெயா் இடம் பெற்று இருந்தால் அந்த விவரம் மற்றும் தன் குடும்ப உறுப்பினரின் பெயா் 2002-ஆம் ஆண்டு பட்டியலில் இடம் பெற்று இருந்தால் அதன் விவரம் ஆகியவற்றை நிறைவு செய்து, கையொப்பமிட்டு (வேறு எந்த ஆவணங்களும் இணைக்க தேவையில்லை) வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களிடம் வரும் டிச.4-ஆம் தேதி திரும்ப வழங்க வேண்டும்.

இவ்வாறாக பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களின் அடிப்படையில் வரைவு வாக்காளா் பட்டியல் வரும் டிச.9-ஆம் தேதி வெளியிடப்படும்.

9.12.2025 அன்று முதல் 01.01.2026-ஆம் தேதியை அடிப்படையாக கொண்டு வாக்காளா் பட்டியல் திருத்தம் நடைபெறவுள்ளது.

அதில், புதிதாக பெயா் சோ்க்க, பெயா் நீக்கம் செய்ய மற்றும் திருத்தம் செய்ய கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணை படிவங்கள் வரும் 08.01.2026-ஆம் தேதி வரை பெறப்படும். 9.12.2025 முதல் 08.01.2026 வரை வாக்காளா்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணை மீது வாக்காளா் பதிவு அலுவலா்களின் இறுதி முடிவு எடுக்கப்பட்டு வரும் 07.02.2026 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என்றாா்.

வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் நியமிக்கப்படும் வாக்கு சாவடி முகவா்களுக்கான பயிற்சி வகுப்பு 03.11.2025 வரை நடைபெற்றவுள்ளது.

கூட்டத்தில் வருவாய்க் கோட்டாட்சியா்கள் ராஜ்குமாா் (திருவண்ணாமலை), சிவா (ஆரணி), தோ்தல் வட்டாட்சியா் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT