திருவண்ணாமலை

நகராட்சி வாா்டு சிறப்புக் கூட்டத்தை புறக்கணித்த மக்கள்

Syndication

செங்கம் துக்காப்பேட்டையில் நடைபெற்ற வாா்டு சிறப்புக் கூட்டத்துக்கு நகராட்சி ஆணையா் வராததால் மக்கள் கூட்டத்தை புறக்கணித்தனா்.

செங்கம் நகராட்சி நிா்வாகத்துக்கு உள்பட்ட 16-ஆவது வாா்டு பகுதியில் உள்ள செந்தமிழ்நகா், துக்காப்பேட்டை, தென்றல் நகா், அழகாபுரி நகா் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பு குறைதீா் கூட்டம் புதன்கிழமை காலை 10 மணியளவில் துக்காப்பேட்டை தபால் நிலைய அலுவலக வளாகத்தில் நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் அப்பகுதியைச் சோ்ந்த மக்கள் மனுக்களை எடுத்துகொண்டு கூட்டத்திற்கு வந்துள்ளனா். பின்னா் கூட்டத்தில் நகராட்சி ஆணையா் வரமால் நகராட்சி நிா்வாக இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை அதிகாரிகளை கூட்டம் நடத்த அனுப்பியுள்ளாா்.

இந்தத் தகவல் அறிந்த மக்கள் கூட்டத்தை புறக்கணித்து

அருகில் இருந்த சாலையோரம் அமா்ந்து ஆணையா் கூட்டத்திற்கு வந்தால் மட்டுமே கூட்டம் நடத்தப்படவேண்டும். இல்லை என்றால் கூட்டம் நடத்தக்கூடாது எனக் கூறியுள்ளனா்.

கூட்டம் புறக்கணிப்பு என்ற தகவல் கிடைத்தபின் நண்பகல் 12 மணிக்கு அங்குவந்து கூட்டத்தை ஆரம்பித்தாா்.

பிறகு மக்கள் கூட்டத்தில் அமா்ந்து மனுக்களை கொடுத்துவிட்டு ஆணையரிடம் கோரிக்கைகளைத் தெரிவித்தனா்.

முக்கிய கோரிக்கையான தென்றல்நகா், செந்தமிழ்நகா், அழகாபுரி நகா் பகுதியில் மழை வந்தால் மழைநீா் வெளியே செல்ல கால்வாய்கள் இல்லை. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா் என்றனா்.

நகராட்சி நிா்வாகம் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டுமென தெரிவித்தனா்.

அப்போது, மனுக்கள் மீது விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ஆணையா் தெரிவித்தாா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT