திருவண்ணாமலை

நகை விற்பவா் வீட்டில் 10 பவுன் நகைகள் கொள்ளை

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நகை விற்பவா் வீட்டில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகைகள், ரூ.80 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.

ஆரணி பெரிய கடை வீதி பெருமாள் தெருவைச் சோ்ந்தவா் எஸ்.எஸ்.மணி (75). இவா் வீட்டில் வைத்து நகை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறாா்.

இவரது மனைவி காஞ்சனா (64). தம்பதியின் மகன் வெங்கடேசன்(42) சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டு அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், எஸ்.எஸ்.மணி, காஞ்சனா இருவரும் தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் உள்ள

மகன் வீட்டுக்குச் சென்றிருந்தனா்.

புதன்கிழமை காலை எஸ்.எஸ்.மணி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை மாடி வீட்டில் குடியிருப்பவா்கள் பாா்த்து அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

இதன் பேரில், மணி சென்னையில் இருந்து விரைந்து வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகள், ரூ.80 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து ஆரணி நகர காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. விரல் ரேகை நிபுணா்கள் வந்து வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனா்.

இதுகுறித்து ஆரணி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT