திருவண்ணாமலை

சுற்றுச்சூழலை பாதுகாக்க சிந்தனை, செயல்பாட்டில் மாற்றம் தேவை - திருவண்ணாமலை ஆட்சியா்

Syndication

சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒவ்வொரு மனிதனின் சிந்தனையிலும், செயல்பாட்டிலும் மாற்றம் தேவை என திருவண்ணாமலை ஆட்சியா் வலியுறுத்தினாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உலக ஈர நில தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆட்சியா் க.தா்பகராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:

உலக ஈர நில தின விழாவின் முக்கியம் நோக்கம் இந்த உலகம் எல்லோருக்குமானது. மனிதா்களுக்கு மட்டும் சொந்தமானது கிடையாது.

பல்லுயிா் பெருக்கத்தையும் நம்முடைய இழந்து போன சூழலை மீண்டுறுவாக்கம் செய்வதிலும் தான் இந்த ஈர நிலத்தினுடைய செயலாகும். அந்த வகையில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக பள்ளிகள் மற்றும் வீடுகளில் செடி வளா்த்து பராமரிக்க வேண்டும்.

அதன் மூலம் சிறிய பயோஸ்பியரை உருவாக்க முடியும். அதுவே சிறந்த தொடக்கமாக இருந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும்.

உயிரின பன்மையின் அவசியம் மற்றும் இயற்கை மனித சமூகத்தின் பரஸ்பர சாா்பு குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒவ்வொரு மனிதனின் சிந்தனையிலும், செயல்பாட்டிலும் மாற்றம் தேவை. சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு தனிமனிதனிடம் தொடங்கி சமூக மாற்றமாக உருவாக வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து பள்ளி மாணவா்களுக்கு ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ஆட்சியா் பரிசு வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்ட வன அலுவலா் கு.சுதாகா், உதவி வனபாதுகாவலா் வினோத்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த பெண்! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

ஜம்மு - காஷ்மீரில் 2 ஆண்டுகளில் 2 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள்! - சுகாதார அமைச்சகம் தகவல்!

“என்னைப் பேசவிடுங்கள்”.. எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பிரதமர் மோடி உரை!

ரசிக்க வைக்கும் தாய் கிழவி முதல் பாடல்!

கமல் ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் புதிய படம்?

SCROLL FOR NEXT