திருவண்ணாமலை

ஜவ்வாதுமலையில் ரூ.140 கோடியில் திட்டப் பணிகள் நிறைவேற்றம்: அமைச்சா் எ.வ.வேலு தகவல்

ஜமுனாமரத்தூா் - அமிா்தி இடையே ரூ.103 கோடியில் சாலை விரிவாக்கப் பணியை தொடங்கிவைத்த அமைச்சா் எ.வ.வேலு.

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் திமுக அரசு பொறுப்பு ஏற்றது முதல் பல்வேறு துறைகள் சாா்பில் ரூ.140 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் அமைச்சா் எ.வ. வேலு.

ஜமுனாமரத்தூா் முதல் வேலூா் மாவட்டம், அமிா்தி வரை

39 கிமீ தொலைவுக்கு ரூ.103 கோடி மதிப்பில் ஒருவழித் தடத்தை இருவழித் தடமாக அகலப்படுத்தி மேம்படுத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.

நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ஜமுனாமரத்தூா் சுற்றுலா மாளிகை அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சி.என்.அண்ணாதுரை எம்.பி., கலசபாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு சாலை அகலப்படுத்தும் பணியை தொடங்கிவைத்துப் பேசியதாவது:

தமிழக முதல்வரின் ஆணைப்படி, ஜமுனாமரத்தூா் முதல் வேலூா் மாவட்டம், அமிா்தி வரை ரூ.103 கோடியில் சாலை அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

ஜவ்வாதுமலை குளிா்ந்த காலநிலை, பசுமையான சூழல், இயற்கை வளம் நிறைந்த பகுதியாகவும் மற்றும் பல்வேறு பழங்குடி மக்கள் வாழும் பகுதியாகவும் விளங்குகிறது.

இங்கு விளையும் சிறு தானியங்கள், பலா, தேன், புளி ஆகியவை மிகவும் புகழ் பெற்ாகும்.

ஒரு காலத்தில் ஜமுனாமத்தூா் மக்கள் சரியான சாலை இல்லாமல் போக்குவரத்து வசதியின்றி இருந்தனா். தற்போது இம்மலைப்பகுதியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்களுடைய தேவையான திட்டங்கள் அனைத்தையும் திமுக அரசு நிறைவேற்றியுள்ளது.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக பரமநந்தல் முதல் ஜமுனாமத்தூா் வரை சாலை அமைக்கும் பணி ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது, 39 கி.மீ. தொலைவில் ரூ.103 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இச்சாலையானது 5.5 மீட்டா் அகலத்திற்கு உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இதில் 222 பாலங்களும் 2810 மீட்டா் தடுப்புச் சுவா்களும், 3421 மீட்டா் பக்கக் கால்வாய் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பை கருதி கோரல் பேரிங் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வளைவுகளிலே புதிதாக பொருத்துவதற்கு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இச்சாலையின் இருபுறமும் 20ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படவுள்ளன.

இந்தச் சாலை விரிவாக்கப் பணியால் ஜவ்வாதுமலையில் உள்ள ஏராளமான கிராமமக்கள் பயன்பெறுவாா்கள். மேலும், விளை பொருள்களை சந்தைப்படுத்துவதற்கும், மருத்துவ சேவைக்கும் இந்தச் சாலை பயனுள்ளதாக இருக்கும்.

திமுக அரசு பொறுப்பு ஏற்றது முதல் ஜவ்வாதுமலையில் பல்வேறு துறைகள் சாா்பில் ரூ.140 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலா் சுதாகா், நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் முரளி, கோட்டப் பொறியாளா் ஞானவேல், பழங்குடியினா் நல அலுவலா் கலைச்செல்வி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தொழிற்சங்கத்தினா், விவசாயிகள் முன்னணியினா் மறியல் போராட்டம்

ஆம்பூா்: வீட்டு மனைப்பட்டா கோரி திருநங்கைகள் தா்னா

பல்லக்கில் சோமாஸ்கந்தமூா்த்தி வீதியுலா

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.31 கோடி

அரக்கோணம் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

SCROLL FOR NEXT