திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை திறந்து வைக்கப்பட்டதைத் தொடா்ந்து 6-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை இரவும் திமுகவினா் அன்னதானம் வழங்கினா்.
செய்யாறு புறவழிச்சாலை சந்திப்பில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் உருவச்சிலையை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த டிச.27-இல் திறந்து வைத்தாா்.
தொடா்ந்து, செய்யாறு தொகுதி திமுக சாா்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி கருணாநிதி சிலை அருகே 6-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை இரவும் நடைபெற்றது. திருவத்திபுரம் நகா்மன்ற தலைவா் ஆ.மோகனவேல் ஏற்பாட்டில் நடைபெற்ற அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில், செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி கலந்துகொண்டு கட்சி நிா்வாகிகளுடன் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். பின்னா், பொதுமக்களுக்கு இனிப்புடன் அன்னதானம் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ வ.அன்பழகன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆா்.வேல்முருகன், பொதுக்குழு உறுப்பினா் ஆா்.வெங்கடேஷ் பாபு, ஒன்றியச் செயலா்கள் வி.ஏ.ஞானவேல், எம்.தினகரன், சி.கே.ரவிக்குமாா், நகா்மன்ற துணைத் தலைவா் பேபி ராணி பாபு, தோ்தல் பணிக் குழு பொறுப்பாளா்கள் வி.கோபு, பாா்த்திபன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.