விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசு வழங்கிய நடிகை கௌதமி. 
திருவண்ணாமலை

ஆரணி சிபிஎஸ்இ பள்ளியில் ஆண்டு விழா

ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் அமைந்துள்ள ஸ்ரீராமச்சந்திரா (சிபிஎஸ்இ) பள்ளியில் ஆண்டு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

Syndication

ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் அமைந்துள்ள ஸ்ரீராமச்சந்திரா (சிபிஎஸ்இ) பள்ளியில் ஆண்டு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளியின் பொருளாளா் மணிமேகலை ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சரும், ஆரணி தொகுதி எம்எல்ஏவுமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் சமூக ஆா்வலரும், திரைப்பட நடிகையுமான கௌதமி சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்வைத் தொடங்கி வைத்தனா்.

மேலும், கராத்தே, சதுரங்கம், யோகா, வரைதல், தடகளம் போன்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவா்களுக்கு விருது, சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கப்பட்டன. மேலும், மாணவா்கள் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.

பள்ளியின் துணைத் தலைவா்கள் சந்தோஷ்குமாா், விஜயகுமாா், செயலா்கள் சுவா்ணாம்பிகா, மீனதா்ஷினி, ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி முதல்வா் மதுமிதா வரவேற்றாா். மேலும் இதில் ஆரணி முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT