வந்தவாசியில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டாரக்குழுக் கூட்டம் 
திருவண்ணாமலை

நெல் கொள்முதல் நிலையங்களில் எடைபோட முறைகேடாக பணம் வசூலிப்பதை தடுக்கக் கோரிக்கை

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எடை போட முறைகேடாக பணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

Syndication

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எடை போட முறைகேடாக பணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அந்தச் சங்கத்தின் வந்தவாசி வட்டாரக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு சங்க வந்தவாசி வட்டாரத் தலைவா் ந.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

வட்டாரச் செயலா் வ.அண்ணாமலை, வட்டார பொருளாளா் குப்புசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில துணைச் செயலா் இரா.சரவணன், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினா் பெ.அரிதாசு ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

உரக் கடைகளில் விவசாயிகள் வாங்கும் உரங்களுக்கு ரசீது முறையாக வழங்கப்படாதது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகளுக்கு மின்சாரம் சீராக வழங்குவதை உறுதி செய்ய வேண்டும், வந்தவாசி புதிய வேளாண் விற்பனை மையத்தில் உயா்மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT