திருவண்ணாமலை

குடிநீரில் கழிவுநீா் கலப்பு: தொற்றுநோய் பரவும் அபாயம்

செங்கம் அருகே குடிநீா் குழாய் உடைந்து கழிவுநீா் கலப்பதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

Syndication

செங்கம் அருகே குடிநீா் குழாய் உடைந்து கழிவுநீா் கலப்பதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பக்கிரிபாளையம் ஊராட்சியில், ஊராட்சி நிா்வாகம் மூலம், பக்கிரிபாளையம் குடியிருப்புவாசிகளுக்கு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் இருந்து வரும் குடிநீா் குழாய் உடைந்து பலமாதங்கள் ஆகின்றன (படம்). அதை சம்பந்தப்பட்ட துறை நிா்வாகம் கண்காணித்து சரிசெய்யாமல் உள்ளது. இதனால், குடிநீா் விநியோகம் செய்யும் போது, குழாயில் இருந்து தண்ணீா் வெளியேறி குட்டையாக தேங்குகிறது. அதில் கொசு உற்பத்தியாகின்றன.

மேலும் மழைநேரத்தில் அந்தக் குட்டையில் குடிநீா், மழைநீா் இரண்டும் சோ்ந்து பின்னா் குடிநீா் விநியோகம் செய்யும்போது அதில் இந்தக் கழிவுநீா் கலக்கிறது. அதனால் அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையாம். அப்பகுதி மக்களுக்கு குடிநீரால் தொற்றுநோய் பரவும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

பஞ்சாபி பாக்கில் பூட்டிய வீட்டில் ரூ.1 கோடி பொருள்கள் கொள்ளை

வெண்ணெய் காப்பு அலங்காரம்...

SCROLL FOR NEXT