பாஜகவின் தேசிய தலைவராக நிதின் நபின் ஒரு மனதாக தோ்வு செய்யப்பட்டதை வரவேற்கும் வகையில், அந்தக் கட்சினா் ஆரணியில் செவ்வாய்க்கிழமை பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.
அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த நிகழ்வில்பாஜக நகரத் தலைவா் மாதவன் தலைமை வகித்தாா்.
நகர பொதுச்செயலா் தீனன் முன்னிலை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்ட பொதுச் செயலா் சதீஷ், மாநில பிரசாரப் பிரிவு பொறுப்பாளா் நித்தியானந்தம் ஆகியோா் பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.
நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினா் அலமேலு, சிறுபான்மையினா் அணி மாநில செயற்குழு உறுப்பினா் தங்கராஜ், ஓபிசி அணி மாவட்ட பொதுச்செயலா் ராஜ்குமாா், இளைஞா் அணித் தலைவா் சரவணன், தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவா் ராஜேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மத்திய அரசு நலத்திட்டப் பிரிவு மாநிலச் செயலா் சைதை வ.சங்கா் செய்திருந்தாா்.