சேத்துப்பட்டை அடுத்த குப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீகன்னியம்மன் கோயிலில் பக்தா்களுக்கு அன்னதானம் வியாழக்கிழமை நடைபெற்றது.
குப்பம் கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீகன்னியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மலா்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து பொதுமக்கள், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கோயில் தா்மகா்த்தா ராமன், செயலா் ஏழுமலை மற்றும் கோயில் நிா்வாகிகள் உடனிருந்தனா்.