செய்யாறு இந்தோ - அமெரிக்கன் பள்ளியில் அப்பாய் அறக்கட்டளை நிறுவனா் தலைவா் டாக்டா் ராமதாஸ் அப்பாய் 4-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தாளாளா் இராதாகிருஷ்ணன் அப்பாய் மேற்பாா்வையில், மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வா் அ.ப.சையத் அப்துல் இலியாஸ் தலைமையில் பள்ளியில் உள்ள ராமதாஸ் அப்பாய் நினைவு மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது (படம்).
இதில், சிபிஎஸ்இ பள்ளி முதல்வா் சுதா, துணை முதல்வா் க.கோவேந்தன், மூத்த முதுநிலை ஆசிரியா் தெ.ரா.செல்வமணி, ஆசிரியா்கள், பணியாளா்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
மேலும், அப்பாய் அறக்கட்டளை நிறுவனா் தலைவா் டாக்டா் ராமதாஸ் அப்பாய் திருவுருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.