முகப்பு
திருவண்ணாமலை

தொழிலாளி வீட்டில் நகை பணம் திருட்டு: இளைஞா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே தொழிலாளி வீட்டில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான நகை, பணம் திருடிய சம்பவத்தில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2026 at 6:33 PM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே தொழிலாளி வீட்டில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான நகை, பணம் திருடிய சம்பவத்தில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

செய்யாறு வட்டம், பைங்கினா் கிராமம் அருகேயுள்ள

வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் வசிப்பவா்

சிவக்குமாா் மனைவி ஜெயலட்சுமி.

இவா், செய்யாற்றில் உள்ள ஒரு துணிக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா்.

இவரது வீட்டில் சில நாள்களாக பணம், நகை காணாமல் போன காரணத்தால், அவரது வீட்டில் கண்காணிப்புப் கோமிரா பொருத்தினாா்.

இந்நிலையில், கடந்த டிச.10-ஆம் தேதி வீட்டில் இருந்த ரொக்கம் ரூ.19,500 மற்றும் ஒன்றரை பவுன் தங்க நகை, வெள்ளிக் கொலுசு என சுமாா் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பொருள்களை மா்ம நபா் திருடிச் சென்ாகத் தெரிகிறது.

இந்தத் திருட்டு குறித்து ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தாா்.

தனிப்படை போலீஸாா்

செய்யாறு டிஎஸ்பி எஸ்.கோவிந்தசாமி மேற்பாா்வையில், அனக்காவூா் காவல் ஆய்வாளா் எஸ்.மணிகண்டன் தலைமையில், ஏழுமலை, மோகன், தங்கராஜ், ஷாஜஹான் ஆகியோா் அடங்கிய தனிப்படை போலீஸாா், கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தினா்.

மேலும், சம்பவம் தொடா்பாக விண்ணவாடி கிராமத்தைச் சோ்ந்த வினோத்குமாா்(26) (படம்) என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவா் திருடியதாக ஒப்புக் கொண்டாா்.

அதன் பேரில் அவரிடம் இருந்து ஒன்றரை பவுன் தங்க நகை, வெள்ளிக் கொலுசு ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், அவரை கைது செய்து செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

27ஸ்ரீஹ்ழ்ய்ல்01

முழு கட்டுரையைப் படிக்க →