திருவண்ணாமலை

ஸ்ரீபாலமுருகன் கோயிலில் தெப்பல் உற்சவம்

சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீபாலமுருகன் கோயிலில் தை கிருத்திகையை முன்னிட்டு தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

Syndication

சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீபாலமுருகன் கோயிலில் தை கிருத்திகையை முன்னிட்டு தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

தேவிகாபுரம் ஊராட்சி ஆத்துரை சாலையில் மிகவும் பழைமையான ஸ்ரீபாலமுருகன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தை கிருத்திகையை முன்னிட்டு தெப்பல் உற்சவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து சுவாமி வீதியுலா நடைபெற்றது.

இரவு கட்டாரன்குளத்தில் மயில் வாகனத்தில் ஸ்ரீபாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் மின்னொளியில் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

இதில் தேவிகாபுரம், மலையாம்புரவடை, குப்பம், நரசிங்கபுரம், ஆத்துரை, சித்தாத்துரை, செய்யானந்தல், தச்சம்பாடி, ஊத்தூா் என சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். நிகழ்ச்சியை விழாக்குழுவினா் ஏற்பாடு செய்திருந்தனா்.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT