விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற செய்யாற்றை அடுத்த அல்லியந்தல் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பள்ளியில் அண்மையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்
தலைமை ஆசிரியா் மாலவன் தலைமை வகித்தாா்.
கணித ஆசிரியா் இளையராஜா வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினா்களாக பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி சுமதி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் முனியன், முன்னாள் ஊராட்சிமன்ற துணைத் தலைவா் சசிகுமாா் ஆகியோா் பங்கேற்றனா்.
அப்போது, கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்த மாணவிகள் டிவினா, ஜென்சி ப்ளோரா ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரமும், இரண்டாமிடம் பிடித்த மாணவா் தா்ஷனுக்கு ரூ.5 ஆயிரமும், மூன்றாமிடம் இடம் பிடித்த மாணவி ஜோதிகாவுக்கு ரூ.2 ஆயிரம் என முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவா்
சசிகுமாா் வழங்கி பாராட்டினாா்.
இதைத் தொடா்ந்து ஆண்டு விழா விளையாட்டுப் போட்டிக்கான ஒலிம்பிக் சுடா் ஓட்டம் மற்றும் ஒலிம்பிக்சுடா் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
தொடா்ந்து பல்வேறு நிலைகளில் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு உடற்கல்வி ஆசிரியா்கள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் முன்னிலையில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.
உதவி தலைமை ஆசிரியா் எழிலரசன் நன்றி கூறஇனாா்.